தமிழகத்தில் திமுக அரசு அறிவிக்கும், பொதுமக்கள் நலன் சார்ந்த அனைத்து திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும், நவம்பர் மாதம் முதல் மாவட்ட வாரியாக அரசு திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்யப்படும் என்றும் நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திருமதி ச. உமா அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள, ரூ. 89 கோடி மதிப்பிலான அரசின் புதிய நவீன பால் பதன ஆலை,  உள்ளிட்ட 140 திட்டப் பணிகளுக்கு, ரூ. 366 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முழு கொள்ளவில் குதிரை ஆறு அணை - வெள்ள அபாய எச்சரிக்கை!


தொடர்ந்து, ரூ. 20 கோடி மதிப்பிலான டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், அரசு சட்டக் கல்லூரி, விடுதி, பள்ளிக் கட்டடங்கள், வேளாண் விடுதிகள்,  பாலங்கள், கட்டட பணிகள், இணைப்பு சாலை உள்ளிட்ட 134 முடிவுற்ற திட்டப் பணிகள் ரூ. 298 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தார். இந்த விழாவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு, ரூ. 146.56 கோடி மதிப்பீட்டில்,  கலைஞரின் கனவு இல்லம், கல்விக் கடன்கள், வேளாண் உதவிகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த, கைத்தறிக்கூடம் பார்வையிட்டு, மகளிர் சுய உதவி குழுவினரின் உலர் சாம்பல் சிமெண்ட் கல் உற்பத்தி தொழில் கூடம் திறந்து வைத்து பார்வையிட்டார்.  மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதல்வர் வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில், விழா பேருரையாற்றிப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் அமைந்துள்ளது. அருந்ததியர் சமுதாய மக்களுக்கு கலைஞரால் வழங்கப்பட்ட மூன்று சதவீத இட ஒதுக்கீடு தான் கடந்து 15 ஆண்டு காலமாக அவர்களுடைய கல்வி வேலை வாய்ப்பு பொருளாதார சமூக மேம்பாட்டினை அளித்து வருகிறது. அந்த சட்டத்தை கொண்டு வந்தவர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டின் நாமக்கல் உள்பட எல்லா மாவட்டங்களுக்கும் பல்வேறு சட்டங்களை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். நாமக்கல் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாவட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாயை விதம் மாநில அளவில்  முதலிடம் பெற்றுள்ளது.  தமிழ் புதல்வன் திட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 


ராசிபுரம் கூட்டு கூடிய திட்டம், பள்ளிபாளையம் ஆலம்பாளையம் படவேடு கூட்டு கூடிய திட்டம், மோகனூர் புதிய குடியுரி திட்டம், ராசிபுரத்தில் புதிய மாவட்ட அரசு மருத்துவமனை, திருச்செங்கோட்டில் புதிய தலைமை அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனை கட்டணம், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், சேந்தமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டடம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டணம், குமாரபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கலில் அறிவு சார் மையம், உள்ளிட்ட பல திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு நிறைவேற்றி கொடுத்துள்ளோம். அனைத்தின் அரசு அனைத்து அரசு துறைகள் சார்பிலும் பொதுமக்கள் பயனடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தனி நபர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திட்டங்கள் அனைத்தும் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டை கொண்டு வரப்படும். 


திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டு காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் திட்டங்களில் நிறைவேற்றப்பட்டவை, நடைபெற்று வரும் பணிகள், குறித்து துறைவாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் முடிக்கப்பட்டு அடுத்த மாதத்திலிருந்து மாவட்ட வாரியாக நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளேன். திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நாமக்கல் மாநகராட்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்படும். கொல்லிமலை பகுதியில் விளையும் பழங்கள் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய குளிர் பதன கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுகுமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும். மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்யப்படும் எத்தனால் உற்பத்தியழகு நாலு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 


நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் நெடுஞ்சாலை துறை மூலமாக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் அருந்ததியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஒளிவுநிலை மக்கள் ஏழை எளியோர் கோவில் அர்ச்சகர்கள் சிறுபான்மையினர் பெண்கள் இளைஞர்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து சமூக மக்களையும் மேம்படுத்தி வருகிறோம். சென்னை மழையின் போது சிறப்பான முன்னேற்பாடு பணிகளை, தூய்மைப் பணியாளர்களின் உதவியோடு மேற்கொண்டு பணிகளை செய்து முடித்தோம்.   குடும்பத்தில் ஒருவராக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார் என தூய்மை பணியாளர் என்னிடம் கூறியதே இந்த ஆட்சிக்கு கிடைத்த பெரிய பாராட்டு ஆகும். பேரறிஞர் அண்ணா கூறியதுபோல ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். 


மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதோடு தொழில் வளர்ச்சி, வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம். பெரிய தொழிற்சாலை மட்டுமல்லாமல் சிறு குரு தொழிற்சாலை வளர்க்கின்றோம்.  தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 10. 69 சதவீதமாக உள்ளது என ஆய்வு அறிக்கை கூறுகிறது. இது அகில இந்திய அளவு வளர்ச்சியை விட மிக மிக அதிகமாகும். தொழிற்சாலைகள் தமிழகத்தில் அதிகம் தொடங்கப்படுகின்றன. ஏராளமான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது கிடைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளும் வளர்ந்து இருக்கும். அந்த நிலையை உருவாக்குவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த வளர்ச்சி இப்போது நாம் கண்கூடாக பார்க்கின்றோம். அதன் மூலம் தமிழக அரசுக்கு பாராட்டு கிடைக்கிறது. திமுகவுக்கு வாக்களிக்க மறந்தவர்களிடமிருந்து பாராட்டு கிடைக்கிறது. 


கடந்த சட்டமன்ற தேர்தலைப் பெற்ற செல்வாக்கை விட நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு மதிப்பு சரிந்துள்ளதாக தவறான தகவலை கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் உண்மை நிலையை அறியாமல் பேசுகிறார். மகளிர் இலவச பயணம், ஒரு கோடி மகளிர் உரிமைத் தொகை, தினமும் 20 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்படுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்திலும் இலட்சக்கணக்கானோர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுகின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திறன் மிக்கவர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதுதான் திமுகவின் மதிப்பு செல்வாக்கு ஓங்கி உள்ளது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு ஏற்கத்தக்கது அல்ல.


அனைத்து தேர்தலிலும் மக்களின் பேராதரவை திமுக பெற்று வருகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உணர வேண்டும். திமுகவின் மதிப்பு சரியாகவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மதிப்பு அடமானம் வைக்கப்பட்டது. பதவியை பாதுகாக்க வேண்டும் என்ற என்ற நோக்கத்தில் இருந்ததால் அதிமுக கட்சியின் செல்வாக்கும் சரிந்து விட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக பகுத்துப் பார்த்தால் 222 தொகுதிகளில் திமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது என சுட்டிக்காட்டினார். மக்கள் நலம் ஒன்றிய குறிக்கோளாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதிமுகவை மக்கள் ஒதுக்கி விட்டார்கள் என்பதை உணர வேண்டும். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம் இந்திய துணை கண்டத்திற்கு வழிகாட்டும் திராவிட மாடலா ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டை தலை நிமிர வைப்போம் அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்துவோம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க ஸ்டாலின் விழா பேருரை ஆற்றி பேசினார்.


மேலும் படிக்க - BRICS Summit: அமைதி, வளர்ச்சிக்கு ஒற்றுமை அவசியம்; மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ