மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரது உயர் எண்ணங்களை நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முன்னிறுத்திட உறுதி ஏற்போம் என டிடிவி தினகரம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 


ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7-வது மகனாக பிறந்தவர். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, தனது அசாத்திய திறமையாலும் கடின உழைப்பாலும் ஏவுகணை விஞ்ஞானியாக நாட்டுக்கு அரிய கண்டுபிடிப்புகளை வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.


ஏவுகணை நாயகனின் 87-வது பிறந்தநாளில் அவரை பெருமை படுத்தும் விதமாக அவரது உயர் எண்ணங்களை நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முன்னிறுத்திட உறுதி ஏற்போம் என டிடிவி தினகரம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது...



"இந்திய தேசத்தின் எதிர்காலத்தை இளைய சமூகத்தின் கரங்கள் தாங்கி பிடித்திட வேண்டும் என்ற எழுச்சி சிந்தனையை நாடு முழுவதும் விதைத்திட்ட மாமனிதர், ஏவுகனை நாயகன், முன்னாள் குடியரசு தலைவர், டாக்டர். A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 87வது பிறந்த நன்னாளில் அவரை வணங்கிடுவோம்.


அம் மாமேதையின் உயர் எண்ணங்களை நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முன்னிறுத்திட உறுதி ஏற்போம்." என குறிப்பிட்டுள்ளார்!