DMK பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய 12 தீர்மானங்கள்!
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 27%ல் இருந்து 50% ஆக அதிகரிக்க வேண்டும் என பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 27%ல் இருந்து 50% ஆக அதிகரிக்க வேண்டும் என பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் இன்று காலை 10.30 மணியளவில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்கு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4500 பேர் பங்கேற்றுள்ளனர். பெயருடன் கூடிய அழைப்பிதழ்கள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மு.க.ஸ்டாலினின் தனிச் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
> இந்திய அரசியல் சட்டத்தின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
>நிதி, கல்வி, மானியம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க திமுக பொதுக் குழு வலியுறுத்தியுள்ளது.
>பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர் என்ற சட்டத்திருத்தத்தை திரும்ப பெறுதல், பிறப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்துதல், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு.
> மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 27%ல் இருந்து 50% ஆக அதிகரிக்க வேண்டும்.
> 2020 ஆம் ஆண்டுக்குள் திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது எனவும், வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும்.
> 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைப்பதற்கும், திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்வது.
> இணையதளம் மூலம் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம் செய்வது, வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க விதிகளில் மாற்றம் கொண்டு வரும்.
> உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது.
> இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை என நிர்ணயித்தும், மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம் செய்து.
> பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
> நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.
> உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்.
> அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.
> மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத தமிழக இளைஞர்களை நியமித்திட வேண்டும்.
> அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 21 முக்கிய தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.