BJP தலைவர் அமித் ஷா தமிழகம் வருகை ரத்து; கூட்டணி குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பில்லை
இன்று காலை சென்னை வருவதாக இருந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பயணம் ரத்து...
இன்று காலை சென்னை வருவதாக இருந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பயணம் ரத்து. கூட்டணி குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பில்லை என்றும் தகவல்.
பாஜக - அமித் ஷா தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக தமிழகம் வருகிறார் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா!
தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா இன்று சென்னை வருகிறார். கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான தமிழக பாஜ.க. பொறுப்பாளராக பியுஸ் கோயல் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்ததை அடுத்து, பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா இன்று சென்னை வருகிறார். வருகிற 22ந் தேதி ராமேஸ்வரத்தில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வருவது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.வுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அமீத்ஷா இன்று ஆலோசனை நடத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும் அமீத்ஷாவை சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், நேற்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.வுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.