சென்னையில் அம்மா சமுதாய வானொலியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: அம்மா சமுதாய வானொலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா சமுதாய வானொலி மூலம் முதல்வர் ஒரு கோடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் உரையாட இயலும். இந்தியாவிலேயே முதன்முறையாக கைபேசி மூலம் நவீன தொழில்நுட்பத்தில் அம்மா சமுதாய வானொலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மா சமுதாய வானொலி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவிலேயே முதன் முறையாக கைப்பேசி மூலம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு கோடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அரசின் செய்திகள் மற்றும் பல்வேறு திட்டங்களை நொடிப்பொழுதுக்குள் கொண்டு செல்லும் விதத்தில் சமுதாய வானொலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களோடு தினந்தோறும் முதலமைச்சர் உரையாட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சமுதாய வானொலியில் தினந்தோறும் ஒரு கோடி மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுடன் முதல்வர் பேச முடியும்.மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அரசின் செய்திகள் சென்றடைய சமுதாய வானொலி உதவும். இதை தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட அமைச்சர் ஓ.எஸ் மணியன் பெற்றுக்கொண்டார்.


இதனிடையே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, சுகாதாரத்துறை சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.