சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இன்று ‛அம்மா கல்வியகம்' என்ற இணைய தள சேவையை துவக்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இதன்மூலம் மாணவர்கள் தங்களின் கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.


ஒ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியினர், கட்சியை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். மார்ச் 8-ம் தேதி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கேட்டு உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். 


இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில், ‛அம்மா கல்வியகம்' என்ற இணைய தள சேவையை துவக்கி வைத்தார். கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்த இணைய தளம் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். www.ammakalviyagam.in என்ற பெயரில் இந்த இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.