பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியலை வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியிட உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.


 ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க கூடாது என கோர்ட்டுக்கு சென்றவர்கள் மற்றும் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று கூறியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட உள்ளோம். மேலும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகள் குறித்து வரும் பிப்ரவரி 28ம் தேதி இறுதியான முடிவை அறிவிப்போம்.


இந்தியாவின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் வகையில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்று, பிரதமரைத் தேர்ந்தெடுப்போம். அரசியலில் நியாயமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 


இவ்வாறு அவர் கூறினார்.