அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் ஏரிகள் மீட்சி சோழர் கால ஆட்சி என்ற முழக்கத்துடன் சோழர் கால பாசன திட்ட ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சார நடைப்பயணத்தை தொடங்கினர். சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் தெற்காசியாவை தனது கொடையின் கீழ் கொண்டு வந்து கங்கை வரை படையெடுத்து கங்கை நீரை கொண்டு வந்து சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை தோற்றுவித்த ராஜேந்திர சோழன் விவசாய பாசனத்திற்கு சோழர்கள் முக்கியத்துவம் அளித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரியில் சோழ மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றளவும் நிலைத்து நின்று தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை டெல்டா பகுதிகளாக விளங்க காரணகர்த்தாவாக உள்ளார். 


அரியலூர்  மாவட்டத்தில் கண்டிராதீர்த்தம் ஏரி, கரைவெட்டி ஏரி, சுக்கிரனேரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்பு உள்ள பெரிய ஏரிகளையும், சுத்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரி உள்ளிட்ட பல பாசன ஏரிகள் மூலம்  பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.


நாளடைவில் ஏரிகள் ஆக்கிரமிப்பாலும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினாலும் விவசாய பகுதி குறைந்து போனது. எனவே இதனை மீட்டெடுத்து சோழர்கால ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கீழப்பழூரில் பிரச்சார நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.



மேலும் படிக்க | குடித்துவிட்டு பேருந்து ஓட்டினால்.... போக்குவரத்து கழகத்தின் எச்சரிக்கை 


கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பிரச்சார எழுச்சி நடை பயணத்தை தொடங்கியுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று கீழப்பழூர், கண்டிராதித்தம், திருமானூர், ஏலாக்குறிச்சி தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக நடை பயணம் சென்று தா.பழூரில் இன்றைய நடைபயண பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.


நாளை காலை அரியலூரில் தொடங்கி வாலாஜா நகரம், வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம் வழியாக காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் தனது பிரச்சார நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.


வழிநெடிகிலும் சோழர் காலத்தில் திட்டங்கள் எவ்வாறு மேன்மையுற்று இருந்தது தற்பொழுது அவை சுருக்கமடைந்து விவசாயத்திற்கு உபயோகமற்று இருப்பதை சுட்டிக்காட்டி அதை தூர்வாரி மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ராமதாசு அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


மேலும் படிக்க | தேவர் குரு பூஜையில் முதலமைச்சர் ஆப்செண்ட்... காரணம் இதுதான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ