தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், மாநில விலங்குகள் நலவாரியம் அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய தலைவராக முதலமைச்சர் பழனிசாமியும், துணைத் தலைவராக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் செயல்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


தமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் அமைப்பதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ’விலங்கு வதைத் தடுப்பு சட்டம் 1960-ன் பிரிவு 4-ன் படி இந்திய விலங்குகள் நலவரியத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநில விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இருப்பார். துணைத்தலைவராக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இருப்பார்.


மேலும், தலைமைச் செயலாளர், பல துறை செயலாளர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் நிர்வாக குழு தலைவராக கால்நடை பராமரிப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் இருப்பார். காவல்துறை கூடுதல் இயக்குனர், மாநகராட்சி ஆணையர், வனத்துறை அதிகாரிகளும் இந்த விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.