பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் கல்லூரிகள் ஆன்லைனில் ஆகஸ்ட் 18 முதல் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலை காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது இளநிலை (Under Graduate) மற்றும் முதுநிலை (Post Graduate) மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.
ALSO READ | Anna University:ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும்: அமைச்சர் பொன்முடி
அதேபோல் நடப்பு செமஸ்டரில் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும், டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 19 ஆம் தேதி 2022 அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR