கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார். மத்திய அரசு மீது குற்றம்சாட்டும் முன்பாக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியா என்றும் விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது எனக்கூறிய அண்ணாமலை, திமுகவின் அயலக அணியில் உள்ளவர் தான் ஜாபர் சாதிக் என்றாலும் அது குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 தொகுதிகள் டார்கெட்


மேலும், ஜாபர் சாதிக்க்குடன் எடுத்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் எதற்காக டெலிட் செய்தார் என்றும், டி.ஜி.பியை பலிகடா ஆக்க திமுக பார்க்கிறது என்றும் அவர் கூறினார். சிறு ,குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருவதாகவும், மீண்டும் பாஜக தலைமையில் மத்திய அரசு அமையும் போது அனைத்து பிரச்சிணைகளும் தீரும் என்றார் அண்ணாமலை. கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக எனவும் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் படிக்க | அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு 


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா?


கோவையில் மட்டுமின்றி பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பப்பட்டாலும் ஒரு மாநில தலைவராக தனக்கு பல்வேறு கடமைகள் இருக்கிறது என்றும், தனக்குள்ள வேலை மற்றும் சங்கடங்கள் என அனைத்தையும் தேசிய தலைமை இடம் சொல்லி இருக்கும் சூழலில் இதையும் மீறி தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்தார் அண்ணாமலை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும், தமிழகத்தில் திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ள சூழலில் இந்தியாவிலேயே ஒரு மாநில கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் வந்துள்ளது என்றால் அது திமுகவிற்கு தான் என்று கூறினார்.


தேர்தல் அதிகாரியுடன் பயணம்


தேர்தல் விஷயத்தில் எல்லா பண பரிவர்த்தனைகளுக்கும் காசோலை மூலமாகத்தான் பாஜக பணம் கொடுக்கிறது. அதே வேளையில் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் அப்படி இல்லை என்றும் குறிப்பிட்டார் அண்ணாமலை. மகளிர் தினம் ஆண்டில் ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடாது என்றும் 365 நாளும் மகளிரை ஏன் கொண்டாட மாட்டேன் என்கிறோம் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் நீங்களும் ஒரே விமானத்தில் வந்துள்ளீர்களே என்ற கேள்விக்கு அவர் வந்தது தனக்கு தெரியாது என்றும், அதற்கும் எனக்கும் எந்தவித முடிச்சும் போட்டு விடாதீர்கள் என்றும் நகைப்புடன் தெரிவித்தார். 


ஆ ராசாவுக்கு சவால்


கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பொதுக் கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசிய கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை ஆ. ராசா குறித்து வெளியிட்ட 2ஜி ஆடியோவை அவர் மறுக்கட்டும் நான் அரசியலை விட்டேன் விலகுகிறேன் என அண்ணாமலை சவால் விட்டார். பிரதமரை குறித்து ஆ.ராசா மேடையில் பேசியவற்றை கண்டு மக்கள் சிரித்துக் கொண்டுள்ளனர் என்றும், இதை பேசுவதற்கு எந்தவித தார்மீக தகுதியும் அவர்களுக்கு இல்லை என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.


மேலும் படிக்க | திமுகவின் வெற்றி பார்முலா... திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? - முழு விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ