ஒரே பொம்பளைய அண்ணன் தம்பி ரெண்டு பேரும்... அண்ணாமலை ரகசிய பேச்சு - வீடியோ சர்ச்சை!
Annamalai Viral Video: செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, தனது கட்சி நிர்வாகியுடன் அண்ணாமலை பேசிய சர்சைக்குரிய வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் பகிர்ந்து, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Annamalai Viral Video: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகுதான் அவருக்கு, பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் பாஜகவில் இணைவதற்கு முன், ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.
அண்ணாமலை பாஜகவின் மாநிலத்தலைவராக பதவியேற்ற பின் தொடர்ந்து, தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தார் எனலாம். திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை முன்வைப்பது, ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குவது என தமிழகத்தில் முன்னணி எதிர்க்கட்சியாக பாஜகவை முன்வைக்கும் வகையில் செயல்படுகிறார் என பேச்சுக்கள் எழுந்தன.
சமீபத்தில், அவர் DMK Files என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கினார். இதுதொடர்பாக, முதலமைச்சர் தரப்பிலும், பிறர் தரப்பிலும் அண்ணாமலை மீது அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன. இருப்பினும், DMK Files இன் இரண்டாம் பாகத்தை ஜூலை மாதம் வெளியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, உட்கட்சியிலும் அண்ணாமலை சில சலசலப்புகளை உண்டாக்கினார் எனலாம். பிரபல யூ-ட்யூபர் மதன் ரவிசந்திரன் நடத்திய ஸ்டிங்க் ஆப்ரேஷனில் பாஜக நிர்வாகி கே.டி. ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று வெளியானது. அந்த ஸ்டிங் ஆப்ரேஷன் அண்ணாமலை சொல்லிதான் தான் செய்ததாக மதன் அப்போது கூறியிருந்தார். ஆனால், அண்ணாமலை தரப்பில் இது மறுக்கப்பட்டது.
தொடர்ந்து, மதன் ரவிசந்திரன் அண்ணாமலைக்கு எதிரான வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி, திருச்சி சூர்யா - டெய்சி சர்ச்சை, காயத்ரி ரகுராம் நீக்கம் என அண்ணாமலை மீது பல புகார்கள் உட்கட்சிலேயே எழத்தொடங்கின. குறிப்பாக, தனக்கு ஒத்துவராதவர்களின் தனிப்பட்ட வாழ்வில் அண்ணாமலை தலையிட்டு அவர்களை பிளாக்மெயில் செய்கிறார் என காயத்ரி ரகுராம் தொடர்ந்து பகிரங்கமான முறையில் புகார்களை அடுக்கி வந்தார்.
அந்த வகையில், காயத்ரி ரகுராம் இன்று பகிர்ந்துள்ள ஒரு வீடியோ அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. செய்தியாளர் சந்திப்பிற்கு பின், மேடையில் அமர்ந்துள்ள அண்ணாமலை தனது பக்கத்தில் அமர்ந்திருக்கும் கட்சி நிர்வாகியுடன் பேசுவதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அண்ணாமலை,"அண்ண... மனுசனா இருக்கவே தகுதியில்ல... இவங்களுக்கெல்லாம். ஒரே பொம்பளைய அண்ணன், தம்பி இரண்டு பேரும் வச்சுருக்காங்க. இவங்க எப்படி மனுசங்கள மதிப்பாங்க" என அவர் பேசுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ நேற்று தூத்துக்குடியில் கொடுக்கப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பதிவானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீடியோவில் அண்ணாமலை பேசியது குறித்து காயத்ரி ராகுராம் அந்த பதிவில்,"மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம், முன்தீர்மானமான பேச்சு. இதில் பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார்.
சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்தும் இப்படித்தான் கருத்துகளை அனுப்புகிறார். உண்மை தெரியாமல் முன்தீர்மானமாக ஒரு கருத்தை பேசுகிறார். அண்ணாமலை முற்றிலும் கறைந்தபடிந்த மற்றும் பழக்கமுள்ள குற்றவாளி" என குறிப்பிட்டுள்ளார். மேலும், 'அண்ணாமலை முற்றிலும் மோசமானவர் மற்றும் கண்ணியம் இல்லாதவர். கிசுகிசு பேசுவதற்கு வேறு வேலை இருக்கிறது. மேனேஜர் வேலை அவருக்கு சரி, தலைவர் பதவி இல்லை' எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ