டெல்லி AIIMS-ல் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு மாணவர் மரணம்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது!
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி, இவரது மகன் சரத்பிரபு.
கோவை மருத்துவக் கல்லூரியில் MBBS முடித்து பின்னர் டெல்லி AIIMS மருத்துவக் கல்லூரியில் MS பட்டமேற்படிப்பை படித்துவந்தார். முதலாம் ஆண்டு பயின்றுவரும் அவர் இன்று கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்மமான முறையில் நிகழ்ந்துள்ள இவரது மரணம் குறித்த காரணம் ஏதும் தெரியவில்லை.
சமீபகாலமாக டெல்லியில் பயிலும் மாணவர்கள் மாயமாவதும், மர்மமான முறையில் இறப்பதும் வாடிக்கையாகி வருகின்றுது. முன்னதாக JNU மாணவர்கள் நஜீப் அகமது மற்றும் முகுல் ஜெயின் மாயமாகினர். இவர்களின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இதேப்போல் கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணனும் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது-