தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தஅதிமுகவின் அர்ஜுணன், மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைின் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிந்ததால் அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், திமுகவை சேர்ந்த கனிமொழி தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த 6 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 


இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 8ம் தேதி கடைசி நாளாகும். மனுக்களை திரும்பப் பெற 11 ஆம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.


இந்த தேர்தலில் அதிமுக தரப்பில் 3 பேரும், திமுக தரப்பில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது. மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்போது அதிமுக சார்பில் பாமகவுக்கும், திமுக சார்பில் மதிமுகவுக்கும் தலா ஒரு இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என இன்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.