உயிருள்ள வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும் : அண்ணாமலை
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், அரவக்குறிச்சி தொகுதிக்கான தனி செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
தமிழக சட்ட பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் திரு.கே,அண்ணாமலை இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை இன்று காலை தொடங்கினார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், அரவக்குறிச்சி தொகுதிக்கான தனி செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
அதில், அரவக்குறிச்சி தொகுதியில், புதிதாக 100 குளங்கள் வெட்டப்பட்டு தண்ணீர் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தார். 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும், வீடு இல்லாத குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் எனவும் கூறினார். அதோடு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மேலும், “மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து தீர்க்க, தொகுதியில் 6 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அமைக்கப்படும். நீங்கள் அளிக்கும் வாக்கு நல்லவருக்கான வாக்கு, நேர்மைக்கான வாக்கு. என் உடலில் உயிர் இருக்கும் வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும். பெண்கள் முகத்தில் இன்றே தாமரை மலர்ந்து விட்டது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப் பதிவு இயந்திரத்தில் தாமரை மலர வேண்டும்.” என அண்ணாமலை அவர்கள் பிரச்சாரத்தின் போது கூறினார்.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. வங்க தேசம் மற்றும் அசாமில் அடுத்த கட்டத் தேர்தல்கள் நடகவுள்ளன. அசாமில் மூன்று கட்டங்களிலும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களிலும், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் தேர்தல்கள் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிகட்ட பரப்புரைகள் முழு முனைப்புடன் நடந்து வருகின்றன.
ALSO READ | "எங்க வீட்டுக்கு நீங்க வருவீங்களா” என்ற சிறுமியின் அழைப்பை ஏற்று அசத்திய அண்ணாமலை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR