சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் செம்பியம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டின் அருகேயே இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது. உணவு டெலிவரி பாய் போல் வந்த கொலையாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். அவரின் கொலை, தமிழ்நாடு முழுவதும் தீயாக பரவிய நிலையில், சென்னை மாநகரம் முழுவதுமே பெரும் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு அமைப்புகளும் இந்த கொலை சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தன்னுடைய அதிர்ச்சியையும், இரங்கலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிடித்த தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பெரும் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழங்கு சீர்க்கெட்டிருப்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்றும் விமர்சித்துள்ளனர்.  இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கடும் கண்டனத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் வெளியிட்டுள்ளார்.


மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!


சென்னை  பெரம்பூரில் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடையே நேரடியாக சந்தித்த அவர், கண்ணீர் விட்டு அழுது தன்னுடைய அனுதாபத்தை தெரிவித்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்திருக்கும் 8 பேரும் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என ஆணித்தரமாக கூறினார். மேலும், உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.


தொடர்ந்து பேசிய திருமாவளவன், " ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது கட்சி அலுவலக வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சரண் அடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது.


உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். பொதுமக்களுக்காக பல பிரச்சனைகளில் தலையிடுபவர் என்பதால், அதற்காக அவருக்கு ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும், ஆனால் வழங்கவில்லை. அது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தலித்துக்கள், தலித் இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார். இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். கூலிப்படைகளை, சாத்தியவாதி கும்பலை, கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும்." என்று கூறினார்.


மேலும் படிக்க |  ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா...? பின்னணி என்ன? - வெளியான பரபரப்பு தகவல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ