பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் அவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். 


ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்... "தமது மகனின் வழக்கு தொடர்பான 3 கோப்புக்களை அவர் இன்று ஆளுநர் மாளிகையில் பன்வாரிலாலை சந்தித்த வழங்கினார். வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதாக, தீர்ப்பளித்த நீதிபதி தாமஸ் கூறிய கருத்து, படுகொலை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகம், பேரறிவாளனின் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவிடவில்லை என CBI முன்னாள் அதிகாரி தியாகராஜன் கூறிய வீடியோ குறுந்தகடு என பல தகவல் கோப்புகளும் இந்த கோப்புகளுடன் இணைத்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்!