நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகையை திருடிய வாலிபர் கைது; 10 சவரன் நகையும் மீட்பு
கடந்த 9ம் தேதி நடைபெற்ற இந்த திருமண விழா,கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள சில முக்கிய பிரமுகர்களும், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
மதுரையில் பிரபல சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழா, மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தி நடந்தது.
கடந்த 9ம் தேதி நடைபெற்ற இந்த திருமண விழா,கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள சில முக்கிய பிரமுகர்களும், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
திருமண விழாவில், மணமகளின் உறவினர் ஒருவர்மணமகளுக்கு பரிசாக கொடுக்க வைத்திருந்த சுமார் 10 சவரன் நகை திருட்டு போனது. இது தொடர்பாக், கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும், பதிவு செய்ப்பட்ட திருமண நிகழ்ச்சி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கும் இங்கும் சுற்றிவதை கண்ட காவல்துறை, அதன் அடிப்படையில் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகையை திருடிய வாலிபர், பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.
ALSO READ | நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு!
அதனை தொடர்ந்து பரமக்குடியில் பதுங்கி இருந்த விக்னேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டு மதுரை அழைத்து வந்தனர். இவர் மீது மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ALSO READ விஜய்சேதுபதியை தொடர்ந்து சீண்டும் நாம் தமிழர் கட்சியினர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR