போலி சான்றிதழ்கள் மூலம் லோன் பெற்ற பெண் கைக்குழந்தையுடன் கைது
ஆன்லைன் செயலி மூலமாக போலியான சான்றிதழ்கள் தயாரித்து லோன் பெற்ற பெண் 8 மாத கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
சென்னை மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(50), சித்ரா (45)தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கடேசனின் மனைவி சித்ரா அவரது பெயரில் ஆன்லைனில் பைசா பஜார் செயலி மூலமாக லோன் அப்ளை செய்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து பைசா பஜார் நிறுவனத்தில் இருந்து வருவதாக கூறி திவ்யா என்பவர் வெங்கடேசின் வீட்டிற்கு வந்து அவரது மனைவியின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை வாங்கி சென்று உள்ளார்.
மேலும் படிக்க | சென்னை: தாயின் மரணத்தில் பிறந்த ஆண் குழந்தை - தனியார் மருத்துவமனை மீது புகார்
ஆனால், சித்ராவுக்கு பைசா பஜார் செயலி மூலமாக லோன் ஏதும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் preter என்ற லோன் அளிக்கும் செயலி நிறுவனத்தில் இருந்து வெங்கடேசன் வீட்டிற்கு வந்த நபர் உங்கள் மனைவி சித்ரா பெயரில் லோன் ஆப் மூலமாக ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளதாக கூறியுள்ளர். மேலும் இதற்கு இஎம்ஐ கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் வெங்கடேசன் சித்ரா தம்பதி இது குறித்து விசாரணை செய்தபோது பைசா பஜார் லோன் ஆபில் பணிபுரியும் திவ்யா என்கிற சித்ரா என்பவர் அவர்களது பெயரில் போலியாக சான்றிதழ்களை தயாரித்து லோன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதிர்ச்சடைந்த வெங்கடேசன் சித்ரா தம்பதி இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போலி சான்றிதழ்களை தயாரித்து மற்றவர்கள் பெயரில் லோன் பெற்ற சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்கிற சித்ராவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | புதைக்கப்பட்ட மண்டை ஓடு, உடல் உறுப்புகள்! ஓரினச்சேர்க்கை வெறியால் நடந்த கொலை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ