துப்பாக்கி முனையில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது
மூவரில் 2 பேரை துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்த எஸ்.பி. செல்வகுமார், அவர்களை வடக்கு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தார்.
வேலூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான கிரீன் சர்க்கில் அருகே சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம் (நரிக்குறவர்கள்) சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த லிங்கேஷ்வரன், கிஷோர், பாலாஜி ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த 1500 பணம், 1 செல்போனை வழிபறி செய்துக்கொண்டு பட்டா கத்தியுடன் கலாட்டா செய்துள்ளனர்.
இதனை அவ்வழியாக சென்ற எஸ்.பி செல்வகுமார் பார்த்து உடனே அவர்களை துரத்தி மூவரில் 2 பேரை துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்த எஸ்.பி. செல்வகுமார் அவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்தி ஒரு செல்போன் ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வடக்கு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பாலாஜி தப்பியோடிய நிலையில் லிங்கேஷ்வரன், கிஷோரை சிறையில் அடைத்தனர். இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மாநகரின் முக்கிய சாலையில் சுற்றிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தில் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR