சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பத்திரிக்கையாளரிடம் பேசிய திருமாவளவன்:-


வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற திமுக, அதிமுக இரண்டு கட்சியும் தங்களது வெற்றியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை. எல்லா தொகுதிகளிலும் பணம் 


பட்டுவாடா பெரிய அளவில் நடந்துள்ளது. இங்கு ஜனநாயகம் வெல்லவில்லை பணநாயகம்தான் வென்றுள்ளது.


நாங்கள் ஜெயிப்பதற்காக எந்த வாக்காளருக்கும் பணம் கொடுக்கவில்லை. இந்த தோல்வி எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. வெற்றியை நோக்கி வேகமாக பயணிப்போம். மக்களுக்கு எங்கள் மீது 


நம்பிக்கையை உள்ளது.


வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்குமேல் முழுமையாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தனியார், பொதுத்துறை வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடனையும் ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.