சட்டசபை உரிமைக்குழு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் அணி கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு கட்சியில் பல்வேறு புதிய சர்சைகள் கிளம்பியது.


இதையடுத்து, அதிமுக-வை வழிநடத்த 15 பேர் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.


தற்காலிகமாக கட்சியை வழிநடத்தவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டது. எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டி, கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை நீக்கிவிட்டு, புதிய பொதுச் செயலாளரை முடிவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர்.


இந்நிலையில் உரிமைக்குழுவிடம் இருந்து அழைப்பு இல்லை என டிடிவி தினகரன் அணி கூறினார்.