மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டரசாங்கத்தில் அ.தி.மு.க?
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடஒதுக்கீடு அளித்ததற்குப் பிறகு, விரைவில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டரசாங்கத்தின் ஒரு பகுதியாக அ.இ.அ.தி.மு.க., மாறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் பொதுகூட்டம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடத்தவுள்ளதாகவும், இஇந்த கூட்டணி தொடர்பாக பிரதான அறிவிப்பு அன்று வெளியிடப்பட்டும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இதுவரை உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை, வெள்ளிக்கிழமை விவாததிற்கு பிறகே முடிவு செய்யப்படும். ஆளும் பி.ஜே.பி, தமிழகத்தில் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே கொண்டுள்ளதால், தமிழ்நாட்டில் அதன் பிடியை அதிகரிக்க முயல்வதற்காகவே இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிகிறது என்றார்.
1998-99 மற்றும் 2004-06 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பகுதியாக அ.தி.மு.க., இருந்தது. பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு அடுத்து லோக் சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் அ.தி.மு.க., இருந்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 50 உறுப்பினர்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.