முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முழுமையான ஜென்டில்மேன் -கிரண்பேடி!
வாஜ்பாய் அனைவருக்குமான தலைவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரங்கல் ட்விட்....
வாஜ்பாய் அனைவருக்குமான தலைவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரங்கல் ட்விட்....
முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தநிலையில், நேற்று மாலை 5.57 மணியளவில் சிகிச்சைப்பலனின்றி காலமானார். இதையடுத்து, டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மேலும், இன்று மாலை 5 மணியளவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது மறைந்த முதலவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல் பாஜக-வின் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.....
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.... அரசியல் சகாப்தம் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது. அவர் மற்றவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பவர். ஒருமுறை நானும் அவரும் போர்டிங் பாஸ் வாங்குவதற்காக ஒரே வரிசையில் நின்று கொண்டு இருந்தோம். அப்போது அவர் மற்றவர்களுடன் வரிசையில் நீண்ட நேரம் நின்றிருந்தார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.