தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது.  உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் உள்ளாட்சி தேர்தல் பதவிகள் ஒரு சில இடங்களில் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. போட்டியை தவிர்ப்பதற்காக கிராம பஞ்சாயத்தினர் சேர்ந்து ஒரே ஒரு நபரை மட்டும் தேர்தலில் நிறுத்தும் வகையில் பதவி ஏலம் விடப்படும்.  அவரிடமிருந்து பெறப்பட்ட தொகை அந்த பகுதி மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராமங்கள் முன்னேற கிராமசபைகள் எடுக்கும் முடிவுகள்தான் காரணம். ஆனால் சமீப காலங்களில் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்யவருவதில்லை. ஏலத்தில் தலைவராக ஒருவர் தேர்வு செய்யப்பட்டால், அவர் தான் செலுத்திய ஏலத்தொகையை முதலில் திரும்பப் பெறவேண்டும் என்பதில்தான் கவனமாக இருப்பார். கிராம மக்கள் தங்களது குறைகளை தீர்க்கவோ, தங்களது ஊருக்கு தேவையான வசதிகளைப் பெறுவதற்கோ லஞ்சம் கொடுக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்.



முறையாக தேர்தல் நடந்து தலைவர்கள் தேர்வாகும் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம அளவில் தேர்தல் அல்லாத முறையில் தலைவர்கள் தேர்வாகும் பஞ்சாயத்துகள் ஒப்பீட்டளவில் எவ்வாறு செயல்படுகின்றன என்ற ஆய்வுள், தேர்தல் இல்லாத பஞ்சாயத்துகளில் சாதி ரீதியாக வாக்களிப்பது, தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு வழிவகை செய்வது போன்றவை நடக்கின்றன என  தெரியவந்துள்ளது.  அதேநேரம் தற்போது தலைவர் பதவிகள் ஏலம் விடுவது, சீட்டு குலுக்கி தேர்வு செய்வது போன்ற பல விதிமீறல்கள் அரங்கேறினாலும், மாநில தேர்தல் ஆணையம் இதுவரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.


உள்ளாட்சி அமைப்புகளான பதவிகளை ஏலம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்த போதிலும் ஒரு சில இடங்களில் ஏலம் விடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பதவிகள் ஏலம் விடுவது சட்டப்படி தவறு என்றும் அவ்வாறு உள்ளாட்சி பதவிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.  


இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் அறிக்கைகளையும் ஏனைய 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக  ஊராட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து  15.09.2021 முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாக நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.



இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மக்கள் ஆசிய ஜோதி பிழம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது, அதுமட்டுமின்றி தண்டனைக்கு உரியது என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்ச்சிகளுக்கும் ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால் ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிப்பதை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை மக்கள் உணர செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இது போன்ற நிகழ்வுகளை நிகழா வண்ணம் தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.  தேர்தல் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பப்பட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR