கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றறை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புக்கள் கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழக அரசு (Tamil Nadu Government) சார்பில் கல்வித் தொலைகாட்சி (Kalvi Television) மூலம் மாணவர்களுக்கு பாடம் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை, மாணவர்கள் இல்லங்களில் முறையாக கவனிக்கின்றனரா என்பது குறித்து மாணவர்களின் வீடுகளுக்கேச் சென்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ | தமிழக அரசின் கல்வி தொலைகாட்சியில் NEET, JEE தேர்வுகான பாடங்கள்...
இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது.,
அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத சூழலில், அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது.
மேலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஆர்வமுடன் கல்வித் தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துகிறார்களா எனவும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். அப்படி சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
ALSO READ | தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி: அரசு எடுத்துள்ள நல்ல முடிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப் பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR