இன்று வங்கிகள் ஸ்டிரைக்!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வங்கி ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் கடந்த 21-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வங்கிகளின் நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் 7 சங்கங்கள் பங்கேற்கின்றன.
தனியார் வங்கிகளிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுலாம் எனத் தெரிகிறது. பாதிக்கப்படும் இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று பல்வேறு இடங்களில் ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.