சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரிலுள்ள உலகப்புகழ் பெற்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் மங்களூருவில் உள்ள டாக்டர் கே. சிவர்மா காரந்த் பிலிகுலா உயிரியல் பூங்கா இடையே விலங்குகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. புது தில்லியிலுள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் இந்த விலங்கு பரிமாற்ற திட்டத்துக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், மே 1 2022 முதல் மே 5 2022 வரை இரண்டு உயிரியல் பூங்காக்களும் விலங்குகள் பரிமாற்றத்தை மேற்கொண்டன. அதன் கீழ், வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரு வெள்ளை பெண் புலி மற்றும் ஒரு பெண் நெருப்புக்கோழி ஆகியவை மங்களூரு பிலிகுலா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை ஒரு கால்நடை மருத்துவர், உயிரியலாளர் மற்றும் சீருடைப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவுடன் மங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  



மேலும், மங்களூரு உயிரியல் பூங்காவிலிருந்து 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு மற்றும் ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு ஆகிய விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | அன்னூரில் உள்ள ஒரு வீட்டுச்செடியில் மலர்ந்த அதிசயப் பூ.!


இரண்டு பூங்காக்களிலிருந்தும் விலங்குகளின் பரிமாற்றம் பாதுகாப்பான முறையில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாக கொண்டு வரப்பட்ட விலங்குகள் உயிரியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவுக்கு வந்தவுடன், கால்நடை மருத்துவர்களின் மருத்துவச் சான்றின்படி விலங்குகள் அவற்றின் இருப்பிடத்துக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செயல்முறை முடிந்த பின்னர், அவை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும். 


மிருகங்களின் பரிமாற்றம் குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR