இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அரியானா உள்பட சில மாநிலங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓட வில்லை. தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் அரசு பஸ்கள் ஓடவில்லை. குறிப்பிட்ட அளவிலான பஸ்கள் மட்டும் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வங்கி சேவைகளும் முடங்கி உள்ளன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.


தமிழகம்:-


தமிழகத்தில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி. யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.டி.சி.டி.யூ., சேவா, டி.யூ., சி.சி, எல்.பி.எப்., யூ.டி.யூ.சி. ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும், எம்.எல்.எப்., விடுதலை சிறுத்தை தொழிலாளர் சங்கம், திராவிடர் தொழிலாளர் சங்கம், உழைக்கும் மக்கள் சங்கம் ஆகிய நான்கு தமிழக தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.


அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.


தமிழகத்தில் வழக்கம் போல பஸ் மற்றும் ரெயில்கள், ஆட்டோக்கள் இயங்கின. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் வழக்கம் போல இயங்கியது. சில இடங்களில் மட்டும் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பஸ்களை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.