ஜெயலலிதாக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய மனுவை சென்னை உச்ச நீதிமன்றம் தள்ளபடி செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கே.கே.ரமேஷ் சார்பில் சென்னை உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 


அந்த மனுவில் கூறப்பட்டதாவது:
 
1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். திரைப்படத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பல விருதுகளை பெற்றுள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு, தமிழக முதல்அமைச்சராக பதவி வகித்தார்.


தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கவேண்டும் என்று கடந்த டிசம்பர் 15-ந்தேதி இந்திய பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆகியோர் கோரிக்கை மனு அனுப்பினேன்.


இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர்கள் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காமல் உள்ளனர். எனவே, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதினை வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், யார் - யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த 


ஐகோர்ட்டு எப்படி உத்தரவிட முடியும்? என்று கேள்வி எழுப்பினார்கள். இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.