சொந்த பணிகள், சில சூழ்நிலைகளால் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மே மாதம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவராக பாரதிராஜா ஏகமனதாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 14 ஆம் தேதி ஏனைய நிர்வாகப் பதவிகளுக்கும் செயற்குழுவுக்குமான தேர்தலை மட்டும் நடத்த திட்டமிட்டிருந்தது இயக்குநர் சங்கம்.


ஒரு சில நாள்கள் கழித்து திடீரென கடந்த வாரத்தில், `தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன்' என்று கூறி இயக்குநர் பாரதிராஜா தன் பதவியை ராஜினாமா செய்தார்.


தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருப்பதையடுத்து, அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் தேர்தல் 21 ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 10 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற 12 ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 13-ல் வேட்பாளர் இறுதிப்பட்டியல் அறிவிக்கபடும் எனவும் தெரிவித்துள்ளனர். வேறுபதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் தலைவர் பதவிக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் கூறியுள்ளனர்.


இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சொந்தப் பிரச்சினைகள் மற்றும் சில சூழ்நிலைகளால் தற்காலிகமாக விலகியிருக்கிறேன். சிலர் என்னை மூளைச்சலவை செய்தனர் என்று கூறுவது எனக்கு மன வேதனையை தருகிறது என்று இயக்குனர் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.