மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா...? கல்வி உதவித்தொகை - ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயின்ட்!
Tamil Nadu Latest News Updates: எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Tamil Nadu Latest News Updates: ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான இந்த உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயாக உள்ளது.
இந்நிலையில், இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்களின் வருடாந்திர குடும்ப வருமான உச்சரவரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மற்ற திட்டங்களை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்
அக்கடிதத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (Economically Weaker Section - EWS) வருமான உச்சவரம்பை, ஒன்றிய அரசு 8 லட்சம் ரூபாயாக மாற்றியமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் போன்றவற்றில் குடும்ப வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் படிக்க | அதானிக்கும் எனக்கும் தொடர்பா...? சட்டப்பேரவையில் ஸ்டாலின் சொன்னது என்ன?
இதனால், பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர் என்று பெருமைபடக் குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (All India Survey on Higher Education) தரவுகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) மற்ற சமூகங்களின் மாணவர்களைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...
மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்குத் தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானது என வலியுறுத்தி உள்ளார்.
மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித் தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமாக பங்களிக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு ஏற்ப, இப்பிரிவினர்களுக்கான உதவித் தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான வரம்பை உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க | கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம்... 1.27 லட்சம் பயனாளிகள் நீக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ