தமிழகத்தில் 14 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று பரவலுக்கு பின் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வெளியூரில் இருந்து வேலை பார்த்த மக்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.  தற்சமயம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.  மீண்டும் எப்பொழுது ஊரடங்கு வரும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் வந்து செல்கிறது.


இதனிடையே கொரோனாவுக்கு பின் பெட்ரோல், டீசலின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் அதிகரித்து வருகிறது.  இருப்பினும் எரிபொருளுக்கான விலையை குறைக்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.  இதனால் நிலைமையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி  வருகின்றனர்.  தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள முக்கியமான 14 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.  குறிப்பாக திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடி, உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை சாவடி, சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர் சாவடி, சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி சாவடி, சேலம் – குமாரபாளையம் சாலையில் வைகுந்தம் சாவடி, திருச்சி – திண்டுக்கல் சாலையில் பொன்னம்பலப்பட்டி சாவடி, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை ஆகிய 14 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.


ALSO READ LPG Gas Cylinder Price: அதிரடியாக சிலிண்டர் விலை உயர்வு


இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வானது வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும், இது தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR