அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்த ஜெயராஜ், பென்னிக்ஸின் காவல் நிலைய மரணம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தச் சம்பவத்திற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையான கண்டனங்களையும்,எதிர்ப்பையும் பதிவு செய்தது. அதேசமயம் திமுக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற அவலம் ஏற்படாது என்ற வாக்குறுதியும் திமுகவினர் சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சியிலும் லாக் அப் மரணங்கள் நடக்கின்றன.


அதிலும் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள்,தஞ்சாவூரைச் சேர்ந்த சத்தியவான், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்,சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன், சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜசேகரன் என வரிசையாக 6 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.



இதில் ராஜசேகரன் என்பவர் நேற்று மரணமடைந்தார். ஏற்கனவே நடந்த லாக் அப் மரணம் குறித்த விவாதம் அடங்குவதற்குள் நேற்று மீண்டும் லாக் அப் மரணம் நடந்துள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையமும் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மேலும் படிக்க | ஓராண்டு திமுக ஆட்சியில் 6 லாக் அப் மரணங்கள் - ஓர் அலசல்!


இந்நிலையில் இன்று சிவசுப்பிரமணியன் என்பவர் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.


 



இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்றொரு ட்வீட்டில் “இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். 


காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை” என குறிப்பிட்டுள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR