சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக உள்ளதாக பாஜக கூறியுள்ளது, மேலும் தமிழகத்தில் ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ்-க்கு பாஜக அண்ணாமலை ஆதரவு ஓபிஎஸ் முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.



ஈரோடு இடைத்தேர்தல் 
இடைத்தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, இந்தத் தேர்தலை ஒரே திடமான சக்தியாக எதிர்கொண்டு, திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று அதிமுகவின் இரு பிரிவினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும் படிக்க | Erode East Bypolls: பாஜகவுக்காக காத்திருக்கிறோம்... வெயிட்டிங்கில் வெறியேற்றும் ஓபிஎஸ் தரப்பு
 
இபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்கும் பாஜக 


அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முன்மொழிந்த வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பாஜக சனிக்கிழமை கூறியுள்ளது, மேலும் பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியும் பாஜகவின் முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 


"பழனிசாமியின் வேட்பாளரை (கே.எஸ். தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ.) ஆதரித்து அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தை தக்கவைத்துக்கொண்டு போட்டியிட ஒன்றிணைந்து செயல்படுமாறு பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளோம்,'' என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை.


அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களில் தனது கட்சி தலையிடுவதாக கூறப்படுவதை மறுத்த அண்ணாமலை, தி.மு.க தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க பாஜக தனது கூட்டணி ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.


மேலும் படிக்க | Madras HC: திருமாவளவன் மீது புகார் கொடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு தேவையா?


பாஜக, இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், இதனை, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என அதிமுகவின் இரு பிரிவின் தலைவர்களுக்கும் ஏறகனவே தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.


"எங்கள் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்... யாரோ ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி நாங்கள் வளர விரும்பவில்லை" என்று அண்ணாமலை கூறினார்.


தங்கள் கருத்தை பன்னீர்செல்வம் ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, ஆனால் அதற்க்கு ஓபிஎஸ் சில நிபந்தனைகளை விதித்தார் என்று சொன்னாலும், அவை என்ன என்பதை அவர் வெளியிடவில்லை. இரு பிரிவினரும் கருத்து வேறுபாடுகளை விரைவில் தீர்த்துக் கொள்வார்கள் என நம்புவதாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  


மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொண்டது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ