Tamil Nadu Latest News Updates: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா நேற்று (டிச. 20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஹெச். ராஜா (H Raja),"நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபடுவது இது கண்டிக்கத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் காந்தியின் (Rahul Gandhi) நடவடிக்கையும் கண்டிக்கத்தக்க வகையில் உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அம்பேத்கர் பிறந்த இடம், வாழ்ந்த இடம் என லண்டன் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நினைவுச் சின்னங்களை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்பேத்கரை சிறுமைப்படுத்திய சிறுநரி கூட்டம் காங்கிரஸ்.


'அம்பேத்கரை வைத்து எதிர்க்கட்சிகள் நாடகம்'


தமிழ்நாடு அரசு அம்பேத்கரை வைத்து நாடகம் ஆடுகிறது. அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால் மூன்றரை வருட தமிழக அரசின் திட்டங்களில் ஒரு திட்டத்திற்காவது அம்பேத்கர் பெயரை வைத்துள்ளார்களா? முதல்வர் ஸ்டாலின் (Tamilnadu Chief Minister MK Stalin) இதற்கு பதில் சொல்லி அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ரூ.944 கோடியை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது சுமார் 2 லட்சம் வீடுகள் என்றால் வீட்டுக்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும். ஆனால் ரூ.2000 மட்டுமே கொடுத்துள்ளார்கள். இது யாரை ஏமாற்றுவதற்கு...?


மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


இந்துகளுக்கு ஆதரவான போராட்டத்திற்கு அரசு அனுமதி தர மறுக்கிறது. தமிழகத்தில் காவல்துறை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாட்டு நலனுக்கு எதிராக தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. கோவை குண்டுபிடிப்பு சம்பவத்தில் 51 பேரை கொலை செய்ய காரணமாக இருந்தவர். அவரது இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அங்கே பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்று கூடி உள்ளனர், இது கண்டிக்கத்தக்கது.


விஜய் குறித்து ஹெச். ராஜா...


தமிழ்நாட்டில் நடிகர் விஜய் (TVK President Vijay) அரசியல் ஒரு பிரம்மை. பிரிவினைவாதம் பேசினால், பாஜகவுக்கு எதிராக பேசினால் தமிழகத்தில் வாக்கு விழும் என பிரம்மை உள்ளது.  விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து நீட் தேர்வுக்கு எதிராக பேசுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக மட்டுமே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வரவில்லை.


மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்றால் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.  நீதிமன்றம் என்ன கூறுகிறதோ? அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். பாஜக அரசுக்கு எதிராக பேசினால்தான் தமிழகத்தில் வாக்கு விழும் என்று மற்றவர்கள் நினைத்து பேசுகிறார்கள். அதேபோல நடிகர் விஜய்யும் நினைத்து பேசுகிறார்.


டங்ஸ்டன் சுரங்கம் - 'திமுக எதிர்ப்பது இதனால் தான்!'


மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தின் மீது மக்களுக்கு அச்சம் இருந்தால் மத்திய அரசு அது குறித்து பரிசீலிக்கும். மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை (Madurai Tungsten Mining) வேதாந்தா நிறுவனம் எடுத்ததால் மட்டுமே திமுக அரசு எதிர்க்கிறது. டங்ஸ்டன் சுரங்கம் மக்கள் வேண்டாம் என கூறுவதால் திட்டத்தை  நிறுத்துவதற்கு மத்திய  அமைச்சர் கிசன் ரெட்டியிடம், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மனு அளித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது. மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்து மத்திய அரசு நல்ல அறிவிப்பை வெளியிடும். அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார்.


மேலும் படிக்க | பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ