ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட எத்தனை நடிகர்கள் உள்ளார்களோ அவர்களிடமும், பொதுமக்களிடமும் உங்களிடமும் ஆதரவு கேட்போம் என்றும், விருப்பம் உள்ளவர்கள் ஆதரவு தெரிவிக்கட்டும், இல்லை என்றால் அவர்கள் விருப்பம் என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வேளச்சேரியில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு பேசியுள்ளார்:


INDI கூட்டணியில் மிக முக்கிய தலைவராக இருந்த நித்திஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்துள்ளார். பத்து நாட்களுக்கு முன்பு INDI கூட்டணியில் இருந்த தலைவர்கள் எப்படியெல்லாம் புள்ளிகள் பிரிந்து பிரிந்து போகிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கோம். 


தேசிய ஜனநாயக கூட்டணி எந்த மாநிலத்தில் யாரை தொடர்பு கொள்வது, யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதை தேசிய தலைவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான பணிகாக புதியதாக குழு தொடங்க வேண்டியது இல்லை. ஜெயக்குமார் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு தமிழக மக்களுக்கு மோடி அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்பது குறித்து தமிழக பாஜக பிரச்சாரம் செய்யும். 


 மேலும் படிக்க | 'சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல...' ரஜினிகாந்த் கொடுத்த புதிய விளக்கம்


தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் கூட்டம் நடத்தும் போது நீங்கள் பார்த்து தெரிந்து கொள்வீர்கள்.  INDI கூட்டணி என்பது அவர்களின் சுயலத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி என்று ஆரம்பம் முதல் சொல்லி வந்தோம். இந்த கூட்டணி நிலைக்கது என்று நாங்கள் கூறினோம் அது இப்பொழுது நடந்துள்ளது. 


அந்த கூட்டணியில் உள்ளவர்கள் மோடி மீதான அக்கறையோ, வளர்ச்சியோ இல்லை, அவர்களை பொறுத்தவரை பாஜகவை எதிர்க்க வேண்டும், மோடி அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக உள்ளது.  மக்கள் நலனில் அக்கறை இல்லாத கூட்டணி தற்பொழுது பிரிந்து கொண்டிருக்கிறது.  தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜகவும் பிரதமர் மோடி அவர்களும் இந்த நாட்டில் உள்ள யாராக இருந்தாலும் நாட்டுக்காக வாங்க வேலை செய்ய வாங்க என எல்லோரையும் இணைத்து வேலை செய்ய தயாராக இருக்கிறார். 


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டம் போடும்போது அனைவரையும் முன் வைத்து கூறுவோம்.  சங்கி என்பது எதிர் கருத்து வைத்துள்ளவர்களும், பாஜகவினர்க்கு எதிராக உள்ளவர்களும் இழிவு படுத்தும், ட்ரோல் பண்ணவும் இதை ரொம்ப நாளாக பண்ணிக்கிட்டு இருக்காங்க, இதில் ஒரு சிலர் சங்கி என்று சொல்வதை பெருமிதமாக கொள்கின்றனர். இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களை சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் இந்திய நாட்டின் குடிமக்கள் அவர்களை சங்கி என்று சொல்லிக் கொள்வதை பெருமை என்று சொல்லிகொள்வோம். 


மத்தியில் இருக்க கூடிய அரசுக்கு என்ன வேலை, மாநில ஆளுநர்க்கு என்ன வேலை, மாநில அரசுக்கு என்ன வேலை என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது.  யார் அதை மீறினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் நீதிமன்றத்தை சென்று நாடலாம்.  நாங்கள் பல ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம், ஒரு ஆண்டு கூட தேர்தலை புறக்கணித்தது இல்லை, எந்த தேர்தலையும் பார்த்து பாஜாவிற்கு பயம் இல்லை, 


ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட எத்தனை நடிகர்கள் உள்ளார்களோ அவர்களிடமும், பொதுமக்களிடமும் உங்களிடமும் ஆதரவு கேட்போம். விருப்பம் உள்ளவர்கள் ஆதரவு தெரிவிக்கட்டும், இல்லை என்றால் அவர்கள் விருப்பம் என பாஜக எம்எல்ஏ, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.


மேலும் படிக்க | 'ஆட்டு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது' - பாஜக குறித்து ஜெயக்குமார் அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ