தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக பாஜக அலுவலகம் முற்றுகை!
பாஜகவில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக இன்று மாலை 3 மணி அளவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கே டி ராகவன் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள பெண்களை அண்ணாமலை தரைகுறைவாக பேசியதாக ஆடியோ வெளியிடப்பட்டது. இதனை கண்டித்து நேற்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக மாலை 3 மணி அளவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸிலிருந்து வெளியான அறிக்கையில், " தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக இன்று மதியம் 3 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்டு தமிழக பாஜக அலுவலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைக்கு எதிராக, பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றி வரும் மத்திய மோடி அரசை கண்டித்து தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் என்ற கமலாலயத்தை முற்றுகையிடுகின்ற போராட்டம் நடைபெற உள்ளது. பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் என்பவரின் ஆபாச வீடியோ வெளிவந்து தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் சூழலில், இதுபோன்ற 17 பாஜக தலைவர் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.
ALSO READ அண்ணாமலைக்கு எதிராக காட்டமான அறிக்கை வெளியிட்ட ஜோதிமணி எம்பி
அதிகார பலத்தோடு நடைபெறும் பாஜகவின் பாலியல் குற்றங்கள் பொள்ளாச்சி போன்ற கொடுமையான சம்பவம் வரை மறக்காமல் இருக்க பெண்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பாக தமிழ்நாடு பாஜக அலுவலகமான கமலாலயத்தில் முற்றுகை எடுக்கும் போராட்டம் நடைபெறும். எனவே பாஜகவின் பொதுச் செயலர் கே டி ராகவன் கைது செய்யவேண்டும், தனது கட்சி பெண்களின் மானத்தை பாதுகாக்க தவறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுரை தமிழக காங்கிரஸில் போராட்டம் ஓயாது" என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe