சென்னை - நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் வருகிற 30 ஆம் தேதி மாலை நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில், நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியின் அழைப்பிதழில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மக்களவையின் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னால் பிரதமர் தேவகௌடா, பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவால், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தேசிய காங்கிரஸ் பார்ட்டியின் தலைவர் சரத் பவார், பாரூக் அப்துல்லா, சீத்தாரம் யெச்சுரி, கம்யூனிஸ்ட் டி.ராஜா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது திமுக. இந்நிலையில், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.



ஆனால் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முரளிதர் ராவ் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கலந்துக்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.



அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போது வெளிநாடு இருப்பதால், அவருக்கு பதிலாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.