பாஜக கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர தொடர்ந்து அழுத்தம்?
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார்.
மத்திய அரசு பாஜக கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர தொடர்ந்து எடப்பாடியாருக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நெல்லையில் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் அறிக்கை தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி சண்முகநாதன் தலைமை தாங்கினார்.
மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை! என்ன அம்சங்கள் இடம் பெரும்?
இதில் அதிமுக நிர்வாகிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்கப்பட்டது. அப்போது தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்க வேண்டும் மேலும் திருச்செந்தூர் நெல்லை நான்கு வழி சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசும்போது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்கியது என்றார். குறிப்பாக மின் உயர்வு கட்டணம் சொத்து வரி நீட் தேர்வு உள்ளிட்ட திமுகவின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
மேலும் மத்திய அரசு பாஜக கூட்டணிக்கு அதிமுகவை கொண்டு வர தொடர்ந்து எடப்பாடியாருக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வரும் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதன் மூலம் மீண்டும் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றார். இக்கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் சின்னதுரை, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டத்திற்குப் பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மற்ற கட்சிகளை விட அதிமுகவால் மட்டுமேதான் நமக்கான உரிமைகளை பெற்றுத்தர முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைக்கு எங்களுடைய கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு பிரதிநிதிகள் வந்து, மனு அளித்திருக்கிறார்கள். அதிமுக இலவுக் காத்த கிளிபோல உள்ளதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது முற்றிலும் தவறானது. யாருக்காகவும், எதற்காகவும் நாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறான கருத்துக்களை பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை முதலில் நோட்டாவில் நின்று வெற்றி பெறுகிறாரா பார்ப்போம். பிறகு அவரைப் பற்றி பேசுவோம். தமிழகத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு எப்போதுமே பிரதான எதிரி என்று எடுத்துக்கொண்டால் அது, திமுகதான். பாஜக என்பது ஒரு மதவாத சக்தி. அந்த மதவாத சக்தியோடு இப்போது இல்லை, எப்போதுமே கூட்டணி இல்லை என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். வரும் மக்களவைத் தேர்தலை பொருத்தவரை எங்களுடைய கூட்டணி ஒரு மிகப்பெரிய மகத்தான வெற்றியை பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறிய ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, அதிமுகவிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை ஒரு கேள்வியாக கேட்கிறீர்களே என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ