கண்ணை மறைத்த காதல்! கிணற்றில் விழுந்த காதலன்!
திருவாரூரில் இரவு நேரத்தில் காதலியுடன் பேச தனியாக சென்ற இளைஞர் மறுநாள் காலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருவாருர்: திருவாரூரில் இரவு நேரத்தில் காதலியுடன் பேச தனியாக சென்ற இளைஞர் மறுநாள் காலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த ஆஷிக், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.காதலியிடம் தினமும் போனில் நேரத்தை செலவிடுவது இவரது வழக்கம்.
இவர் இரவில் தான் பணிபுரியும் நூற்பாலையின் அருகேயிருக்கும் கிணற்று பகுதியில் இருந்து காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரமாக பேசியுள்ளார். இரவு நேரத்தில் நடந்துகொண்டே போனில் பேசியபோது கிணறு இருந்ததை இருந்ததை கவனிக்காமல் சுற்றுச்சுவர் இல்லாத தரைகிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
அவர் காப்பாற்றக்கோரி சத்தம் போட்டும் யாருக்கும் அது கேட்கவில்லை. சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகே அதாவது விடிந்தபிறகே அவர் கிணற்றில் தத்தளிக்கும் தகவல் தெரிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டனர். அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காதல் எப்படியெல்லாம் கண்ணை மறைக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR