மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும் நலத்துறை அமைச்சர்டாக்டர் சி. விஜயபாஸ்கர் இரத்த புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவு துவக்க்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து அவர் கூறியது:- இரத்த புற்றுநோய்க்கு எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள்இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்தது.


எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ரூ.17.00 இலட்சம் வரையில் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 473 பயனாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 36.88 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


புற்றுநோய்/குருதியியல் கோளாறு (Cancer / Hematological disorders) நோயாளிகள் பயனடையும் வகையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் 6.89 கோடி ரூபாய் மதிப்பில் இன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 


நோயாளிக்கு நோய் தொற்று ஏற்படாதவாறு தூய்மையான அறைகள், Apheresis, Cell Preservation Equipment போன்ற அதிநவீன உபகரணங்களை கொண்டதாக எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை அரங்கு துவங்கப்பட்டுள்ளது. 


இப்பிரிவில் எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரத்த புற்றுநோய் வகைகளான லுகேமியா, லிம்போமா, மைலோமா மற்றும் எலும்பு மஜ்ஜை குறைபாடினால் வரும் குறைப்பிறப்பு இரத்த சோகை (Aplastic Anemia) மற்றும் மரபணு குறைபாடுகளினால் ஏற்படும் தலசீமியா, சிக்கில்செல் அனிமியா மேலும் இவைகளுடன் இணையதுகாணப்படும் மிக தீவிரமான நோய் தடுப்பு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க இயலும்.


மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஈட்டப்படும்பணத்தை கொண்டு இப்பிரிவின் உள்கட்டமைப்பு / அடிப்படை வசதி ஆகியவைகளை தொடர்யதுமேம்படுத்துவதன் மூலம் அதிக நோயாளிகள் பயன்பெறுவார்கள்.


இந்நிகழ்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர்மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. தேசிய நலவாழ்வு திட்ட இயக்குநர் திருமதி உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) மரு. நாராயணபாபு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ஜெயயதி, குருதியியல் துறை தலைவர் மரு. மார்கிரேட் மற்றும் உயர் அலுவலர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.