செல்போனில் கேம் விளையாடிதை கண்டித்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!
பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், புளியம்பட்டி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் கேம் விளையாடிவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவே சில சமயம் நமது வாழ்வை அழிக்கும் எமனாக மாறி விடுகிறது. அதேபோன்ற சம்பவம் குறித்து பார்ப்பபோம்.
திண்டுக்கல் மாவட்டம், புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மகளுக்கும் திருமணம் ஆனதால் அழகம்மா தனது மூன்றாவது மகனான செல்லதுரை உடன் வசித்து வருகிறார்.
அவரது மகன் செல்லதுரை அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்ததால், ஒரு ஆண்டுக்கு முன்பு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் செல்லதுரை ஆன்லைன் வகுப்புக்கு செல்லாமல், தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் நேரடி வகுப்பிற்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரின் தாய் அழகம்மாள் செல்போனில் விளையாடாதே படிப்பில் கவனம் செலுத்து என திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்து செல்லதுரை வீட்டில் வைத்திருந்த கண்வலிக்கிழங்கு விதையை சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | 11 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் : கடல் தொல்லை காரணமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR