பேருந்து நிழற்குடையில் +2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுண்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பல்வேறு பகுதிகளில் விசாரணை செய்ததில் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி (தரணி) என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க | வள்ளுவம் வாழ்வியலுக்கானது - ஆளுநருக்கு எதிராக வைரமுத்து ட்வீட்
மேலும் தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனியார் பாலிடெக்னிக் மாணவன் என்பதும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தீயாய் பரவி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் வாழ்க்கை குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் உடனடியாக இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டன குரல்களும் எழுந்து வருகிறது.
மேலும் படிக்க | 'கனிமொழிக்கு வாழ்த்துகள்...ஆனால்' - தமிழிசை கடும் விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ