சென்னை: இந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமகவின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,  திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் (Local Body Election) நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று அறிவித்தார்.


ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டம் வட மாவட்டத்தை சேர்ந்தவை. இங்கு வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் ஓட்டு எங்களுக்கு தான் என்று அரசியல் கட்சி நடத்தி வரும் பாமக, கூட்டணி கட்சியுடன் கரம் கோர்த்து போட்டியிட்டால், குறைந்த இடங்கள் தான் கிடைக்கும். அதுவே தனித்து போட்டியிட்டால் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம் என்ற கணக்கில் அதிரடி முடிவை எடுத்துள்ளது. 


ALSO READ |  Local Body Election: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி - காட்சிகள் மாற வாய்ப்பு!


மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்க, இன்று பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து, பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது.



அறிக்கையின் முக்கிய அம்சம்:


- ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தனியாக தேர்தலில் தனித்து போட்டியிட ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. 


- பாமக கட்சியின் வளர்ச்சி கருதி தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் ஆலோசனையாக இருந்தது. 


- தனித்து போட்டியிடம் முடிவு என்பது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டது.


- தேர்தலில் போட்டியிட ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 15, 16 நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும்.


- இந்த விருப்ப மனுக்களை மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் பெற்றுக்கொள்வார்கள்.


- நேர்காணல் நடத்தி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். 


இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 


ALSO READ | 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR