கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசின் பொது சுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.


ALSO READ | Tamil in CoWIN portal: கோவின் இணையதளத்தில் தமிழ் சேர்ப்பு


நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாலூட்டும் (Breastfeeding Mother) தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா, வேண்டாமா என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. அந்தவகையில் தற்போது பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து விட்ட நிலையில், குழப்பம் நீடித்து வருகிறது. இதனால், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட முன்வருவதில்லை எனக் கூறப்படுகிறது.


இந்நிலையில் மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம், ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் க. குழந்தைசாமி பேசியதாவது.,


சமூக ஊடகங்களில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் தவறான கருத்துகளையும் வதந்திகளையும் நம்பிவிடுகின்றனர். இளைஞர்கள் அறிவியலை நம்ப வேண்டும். தடுப்பூசி மீது அவநம்பிக்கை கொள்ளாமல் தாமாகவே முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும். 


தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே மூன்றாம் அலையின் தாக்கத்தை குறைக்க முடியும். கொரோனா தொற்று ஏற்பட்டு எந்த பாதிப்பும் இல்லையெனில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஆக்சிஜன் அளவு 94க்கு குறைந்தால் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். மேலும் இந்த தடுப்பூசியை பாலூட்டும் தாய்மார்களும் போட்டுக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.


ALSO READ | பம்பர் செய்தி: COVID-19 தடுப்பூசி போட்டவர்களுக்கு FD-யில் அதிக வட்டியை வழங்குகின்றன இந்த வங்கிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR