ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தங்கையை காப்பாற்றிய அண்ணன் உயிரிழப்பு!
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தங்கையை காப்பாற்றிய அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பைசுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 14) அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினரின் காரிய நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த ரஞ்சித்குமார் மற்றும் அவரது தங்கை ஆகியோர் முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
ALSO READ | சரக்கு பாட்டிலில் கலப்படம் செய்த ஆசாமிகள் கைது..!
அங்கு குளித்தபோது ரஞ்சித்குமாரின் தங்கை ஆழமான பகுதியில் சென்று தண்ணீரில் தத்தளித்தை பார்த்த ரஞ்சித்குமார் தங்கையை காப்பாற்ற வேண்டும் என தண்ணீரில் தத்தளித்த தங்கையை காப்பாற்றிவிட்டு ரஞ்சித்குமார் ஆற்றின் நீரில் மூழ்கியதை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து ஒகேனக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய ரஞ்சித்குமாரை மீட்டனர். உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட ரஞ்சித்குமார் ஒகேனக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கையை காப்பற்ற சென்ற அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR