தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் 24 வயதான மல்லிகா. இவர் தனது தாய் மாமனான ஈஸ்வரன் என்பவரது மகன் தினேஷ் குமார் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காதல் விவகாரம் உறவினருக்கும் அவர்களது பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் மல்லிகாவின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


இதனை அடுத்து நேற்றைய தினம் மல்லிகா, தான் காதலித்த தினேஷ் குமார் உடன் வீட்டை விட்டு வெளியேறி சென்று வீரபாண்டி பகுதியில் திருமணம் செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்த கையோடு இன்று சின்னமனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர். 


இதனை அடுத்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில் திருமணம் முடித்த புது பெண் மாப்பிள்ளை வந்த கார் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தது.



இந்நிலையில் தனது தங்கை பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த மல்லிகாவின் அண்ணன் பெருமாள் என்பவர் கோபமடைந்து தனது தங்கை வந்த காரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.


மேலும் படிக்க | கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த 75 வயது மூதாட்டி!


சிறிது நேரத்தில் காரின் மீது பற்ற வைத்த தீ மலமல பரவியது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ அதிவேகமாகப் பரவியதால் உடனடியாக சின்னமன்னுர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுவந்தனர். தண்ணீரை பீச்சி அடித்து காரில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில், எதிர்பாராத விதமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து மல்லிகாவின் அண்ணன் பெருமாளை பிடித்தும் காதல் ஜோடி பிரச்சனை குறித்தும் சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி வந்த கார் தீ பற்றி எரிந்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | சேலம் அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் !!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ