சென்னையில் கந்துவட்டி கொடூரம்: பீர் பாட்டிலால் அடித்து துன்புறுத்திய அரக்க கும்பல்
சென்னையில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் இளைஞரை கந்துவட்டி கும்பல் அழைத்துச் சென்று மது அருந்த வைத்து அடித்து கொடூரமாக துன்புறுத்தியாக வெளியிட்டிருக்கும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ராயப்பேட்டை பகுதியில் வளர்க்கும் மீன்கள் கடை நடத்தி வருகிறார். அவருடைய நண்பரான காளிதாஸ் என்வரிடம் கடந்த நான்கு வருடங்களாக பணம் கொடுக்க வாங்கல் இருந்து வந்திருக்கிறது. காளிதாசிடம் சிறுக சிறுக என ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் பார்த்தசாரதி வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்த்தசாரதியால் காளிதாஸூக்கு கொடுக்க முடியவில்லை.
இதனால் போலீஸார் உதவியுடன் பார்த்தசாரதியை காளிதாஸ் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. முதலில் சென்னை மைலாப்பூர் அழைத்து சென்றதும் அங்குள்ளவர்கள் பேப்பரில் கையெழுத்து மட்டும் போடு, உன்னை அடிக்க மாட்டோம் என்று கூறியதாகவும், அதன் பின்னர் காளிதாஸ் வேளச்சேரியில் உள்ள அவரது நண்பர் பிரவீன் என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது வேளச்சேரிக்கு அழைத்து வரும்படி கூறியதால் பார்த்தசாரதியை வேளச்சேரி அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் பிரவீன் அவருடைய அப்பாவின் ஆட்டோவில் அனைவரையும் அழைத்துகொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்றதாகவும், அது ஒரு தங்கும் விடுதி மாதிரி இருந்ததாக கூறிய பார்த்தசாரதி, அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்ததாக தெரிவித்துள்ளார். தன்னை வற்புறுத்தி மது அருந்த வைத்த பின்னர் பிரவீன், காளிதாஸ் மற்றும் அங்கிருந்தவர்கள் தன்னை கை மற்றும் பீர் பாட்டிலால் அடித்து கொடுமைபடுத்தி துன்புறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் பார்த்தசாரதியை அடிக்கும்போது சிதறிய இரத்தம் பிரவீன் காலில் பட அதை நாவினால் சுவைக்க சொல்லியும் அடித்து கொடுமை படுத்தியாதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியதை புறக்கணித்து மேலும் அடித்து துன்புறுத்தியதாகவும், ஒரு கட்டத்தில் நீலாங்கரை காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே வாகனத்தில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். வலியோடு தவழ்ந்து தவழ்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதாக தெரிவித்திருக்கும் பார்த்தசாரதி, தன்னுடைய இந்த பிரச்சனை குறித்து அமைச்சர், முதல்வர், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கடந்த 21ம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் பாதிக்கபட்ட பார்த்தசாரதி காளிதாஸ், பிரவீன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ipc 294b, 324, 506(!!) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் நண்பராக பழகியவரே இளைஞரை கும்பலுடன் சேர்ந்து அடித்து கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ