2014 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன? வெளியிட்ட அறிவிப்புகள் என்ன என்றும் மு.க ஸ்டாலின் கேள்வி எழுபியுள்ள அவர், பாஜக அரசு ஒருமுறை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட் என்று ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் கூறி வருகின்றனர்.


மத்திய பட்ஜெட் குறித்து தி. மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- 


மத்திய நிதிநிலை அறிக்கை அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாகும், பாஜக அரசு ஒருமுறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.


மேலும் அவர், பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்ததுடன்.


2014 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன? வெளியிட்ட அறிவிப்புகள் என்ன என்றும் கேள்வி எழுபியுள்ளார்.